மனிதநேயம் என்னும் நேசம் ============================= வேற்றுமையின்றி காட்டும்.. நேசமே மனிதநேயம்! பாசாங்கின்றி காட்டும்.. பாசமே மனிதநேயம்! மனிதநேயமானது.. மனிதனுக்கானது மட்டுமல்ல மண்ணின் பிறஉயிருக்கும் சொந்தமே! பூவின் வாசமது.. பூவையருக்கு மட்டுமல்ல பூசைக்கும் பூமிக்கும் சொந்தமே! கதிரவனின் ஒளியானது.. பூமிக்கான நேசம்! மலைதரும் வளமானது.. மழைக்கான நேசம்! மேகந்தரும் மழையானது.. மண்ணிற்கான நேசம்! சிப்பிதரும் முத்தானது.. கடலுக்கான நேசம்! மரந்தரும் நிழலானது.. பறவைக்கான நேசம்! குழல் தரும் ஒலியானது.. இசைக்கான நேசம்! தமிழ்தரும் சுவையானது.. மொழிக்கான நேசம்! மண்ணுலகில்
மனிதருக்கு மறுக்கும் மனிதநேயமெனும் நேசத்தை.. இயற்கை அன்னைக்கென.. மீதம் வைப்போம்!
🔸~ ஜெகதா ~🔸
Comentários