#அம்மா
-----------------
உலகம்
உள்ளவரை
உயிரோடு
உறவாடும்
உறவுக்கு
உன்னத
உதாரணம்-அம்மா!
உயிர்கொடுத்து தன்
உதிரத்தில்
உயிரோடு
உயிராக வளர்த்து..நாம்
உலகை காண தன்
உறக்கம் தொலைத்து
உயிர் வருத்தி,நம்மை ஈன்ற
உயரிய பெண்மை!
உலகம் போற்றும்
உற்ற உறவு-அம்மா!
உண்மையாக
உயிரில் கலந்த
உயர்ந்த உறவு-அம்மாதான்!
😊ஜெகதா🙏
Very nice